உ
மனதுக்குள் எத்தனை சலனம்,
மனதுக்குள் எத்தனை சலனம்,
தமிழ் என்று வந்துவிட்டால்
சந்தோஷத்திலே நம் கவனம் !
பிறப்பு தாய் தந்தை கையில் என்றால்,
அடுத்த அடுத்த நடப்புகள் நம் கையில்,
அதற்க்கு பாதை வகுத்து தந்தது ,
அனைத்தும் உள்ளடக்கிய முத்தமிழ் தான் என்றால் மிகையல்ல ..
அறிவை ஆன்மிகமாக தந்து,
நிலை பெறச்செய்ததும் ,
பகுத்தறிவை பாட்டில் தந்ததும்
தமிழ் தானே ....!
மனிதருள் ஏற்றம் இறக்கம் இன்றி,
மொழியால் வென்றாகி,
இனத்தால் ஒன்றாகிய,
வரலாறு நம்மையே சாரும் .
இளம் கன்னியரை மலர்
என்று சொன்னதும் ,
வேலு நாச்சியாரின் ஒப்பற்ற
வீரத்தை சொன்னதும் ,
குயிலியின் தன்னலமற்ற
தயிரியத்தை பறைசாற்றியதும் ,
இப்படி பல நிலையில் பெண்களை
போற்றியது நம் தமிழ் தானே !!
வள்ளுவன் கம்பன் இளங்கோ
பாரதி ஆகியோரை படித்தால்,
இவ்வுலகு சொல்லும் ,தமிழ்
இவ்வுலகை ஆட்சி செய்யும் மொழி என்றே!
இன்ப துன்பம் எதிலும்
எழுதி வைத்தான் கவிகளை,
அச்சிறுகுடல்பட்டி கவி அரசன்,
தமிழ் தந்த சுவையில்,
சுகத்தில், அவன் ஒரு அதிசயம் !
எல்லா பொழுதிலும்தேன் தமிழ் பருகுக,
வேதனையும் மாறும் மேகத்தை போல...!!!
-மு. விக்னேஷ்
சந்தோஷத்திலே நம் கவனம் !
பிறப்பு தாய் தந்தை கையில் என்றால்,
அடுத்த அடுத்த நடப்புகள் நம் கையில்,
அதற்க்கு பாதை வகுத்து தந்தது ,
அனைத்தும் உள்ளடக்கிய முத்தமிழ் தான் என்றால் மிகையல்ல ..
அறிவை ஆன்மிகமாக தந்து,
நிலை பெறச்செய்ததும் ,
பகுத்தறிவை பாட்டில் தந்ததும்
தமிழ் தானே ....!
மனிதருள் ஏற்றம் இறக்கம் இன்றி,
மொழியால் வென்றாகி,
இனத்தால் ஒன்றாகிய,
வரலாறு நம்மையே சாரும் .
இளம் கன்னியரை மலர்
என்று சொன்னதும் ,
வேலு நாச்சியாரின் ஒப்பற்ற
வீரத்தை சொன்னதும் ,
குயிலியின் தன்னலமற்ற
தயிரியத்தை பறைசாற்றியதும் ,
இப்படி பல நிலையில் பெண்களை
போற்றியது நம் தமிழ் தானே !!
வள்ளுவன் கம்பன் இளங்கோ
பாரதி ஆகியோரை படித்தால்,
இவ்வுலகு சொல்லும் ,தமிழ்
இவ்வுலகை ஆட்சி செய்யும் மொழி என்றே!
இன்ப துன்பம் எதிலும்
எழுதி வைத்தான் கவிகளை,
அச்சிறுகுடல்பட்டி கவி அரசன்,
தமிழ் தந்த சுவையில்,
சுகத்தில், அவன் ஒரு அதிசயம் !
எல்லா பொழுதிலும்தேன் தமிழ் பருகுக,
வேதனையும் மாறும் மேகத்தை போல...!!!
-மு. விக்னேஷ்